/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் உதிரி பாகங்கள் திருட்டு
/
டிராக்டர் உதிரி பாகங்கள் திருட்டு
ADDED : ஜூலை 25, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கனங்கூரில் டிராக்டரில் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரை சேர்ந்தவர் சீனுவாசன், 57; இவர் கடந்த 23ம் தேதி இரவு தனது வீட்டிற்கு முன் டிராக்டரை நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.
நேற்று முன்தினம் எழுந்து பார்த்தபோது டிராக்டரில் இருந்த பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சீனுவாசன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

