/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மண்டை ஓட்டுடன் வந்தவரால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
/
மண்டை ஓட்டுடன் வந்தவரால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
மண்டை ஓட்டுடன் வந்தவரால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
மண்டை ஓட்டுடன் வந்தவரால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ADDED : செப் 23, 2024 02:24 AM

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் காசி, 45. இவர் உலகங்காத்தான் மற்றும் மூரார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காளி சிலை மற்றும் எலும்புக் கூடுகளை வைத்து வழிபடுகிறார்.
மூரார்பாளையம் மணி ஆற்று பாலம் அருகே வழிபாட்டில் இருந்தபோது, அவ்வழியே சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக கூறி, அப்பகுதி மக்கள் சிலையை உடைத்து, அவற்றை வைத்திருந்த மணியை தாக்கினர்.
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக காசி, நேற்று காலை மண்டை ஓடு மாலை அணிந்தபடி, தன் பைக்கில் மண்டை ஓடு, அரிவாளுடன் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவரை, போலீசார் விசாரித்ததில் சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது என்பதால், அங்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி, அவரை அனுப்பினர்.