/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவிகளுக்கு வழங்கப்படும் ஷூக்கள் சாலையோரம் கொட்டப்பட்டதால் பரபரப்பு

ADDED : பிப் 23, 2024 03:53 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் அரசு உதவி பெறும் பள்ளி அருகே மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஷூ, சாக்ஸ் சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருக்கோவிலுார், தாசர்புரம், சைலோம் டேனிஷ் மிஷன் பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே நேற்று மாலை மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் இலவச ஷூக்கள் மற்றும் சாக்ஸ் குவியலாக கொட்டப்பட்டிருந்தது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அவை 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச ஷூக்கள் என தெரியவந்தது. கடந்த நவம்பர் மாதமே இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் மாணவிகளுக்கு ஷூக்களுக்கான அளவீடு எடுக்கப்பட்டு, அரசின் மூலம் ஷூ மற்றும் சாக்ஸ்கள் வழங்கப்பட்டது. இதனை பள்ளி நிர்வாகம் முறையாக மாணவிகளுக்கு வழங்காமல் குவித்து வைத்திருந்த நிலையில், நேற்று வெளியே கொட்டப்பட்டது.
ஏழை, எளிய மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மாணவிகளுக்கு சென்று சேராமல் நிர்வாகத்தால் பாழடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.