/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிக விளை பொருள்கள் வரத்து இன்று கமிட்டியில் ஏலம் நடக்காது
/
அதிக விளை பொருள்கள் வரத்து இன்று கமிட்டியில் ஏலம் நடக்காது
அதிக விளை பொருள்கள் வரத்து இன்று கமிட்டியில் ஏலம் நடக்காது
அதிக விளை பொருள்கள் வரத்து இன்று கமிட்டியில் ஏலம் நடக்காது
ADDED : ஜன 30, 2024 06:01 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு அதிக வரத்தால் விவசாயிகள் பொருட்களைக் கொண்டு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று விவசாயிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல், உளுந்து உள்ளிட்ட மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதிகளவிலான மூட்டைகள் வரத்தால் எடை போடுதல், சாக்கு மாற்றுதல் பணி நடக்க இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று 30ம் தேதி உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் ஏலம் நடக்காது என மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், இன்று மாலை 6:00 மணிக்கு மேல் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.