/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கெங்கை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
/
கெங்கை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 23, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: கீழப்பட்டு கெங்கை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.
சங்கராபுரம் வட்டம், கீழப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவில் ஆடி மாத தேர் திருவிழா, நேற்று முன்தினம் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீ மிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது.
ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.