/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகராஜபுரம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா
/
தியாகராஜபுரம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜன 17, 2025 06:50 AM
சங்கராபுரம்: தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நம்ம ஸ்கூல், நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, மற்றும் படகாட்சி கருவிகள் இயக்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தியாகராஜபுரம் கிராமத்தில் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் ரு.17 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய பள்ளி வகுப்பறை கட்டிட அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
மாவட்ட கலைக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, உதவி திட்ட அலுவலர் மணி, வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனுவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, கல்விதிருவிழா ஒருங்கிணைப்பாளர் திருப்பதி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.