/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாவது சனி வழிபாடு
ADDED : அக் 05, 2025 03:44 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வழிபாடு நடந்தன.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் நேற்று நடந்தது.
அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. உபயநாச்சியார் சகிதம் பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர்.
விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலிலும், அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தன.