திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : நவ 12, 2026 06:50 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலுார், கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாக்களை உள்ளடக்கிய திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பட்டியல் இன்று (நவ.,12) ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. சார் ஆட்சியர் கார்த்திக் ராஜா வெளியிட்டார்.
திருக்கோவிலுார் தொகுதியில் மொத்தம் உள்ள 330 ஓட்டுச் சாவடிகளில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 788 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்கள், 34 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 920 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
