/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்குறள் பலகை திறப்பு விழா
/
திருக்குறள் பலகை திறப்பு விழா
ADDED : ஜன 16, 2025 03:54 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் பலகை திறப்பு விழா நடந்தது.
அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி ,ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ,துணை தலைவர் சத்யா, எஸ்.எம்.சி., தலைவர் அம்பிகா முன்னிலை வகித்தனர்.
அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் செளந்தர்ராஜன் வரவேற்றார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி திருக்குறள் பலகையை திறந்து வைத்தார்.
விழாவில் சங்கராபுரம் வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன்,சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன்,தமிழ் வழி கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னப்பதமிழர்,தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, வெங்கடேசன்,கல்லை மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் முருககுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.