/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
ADDED : டிச 20, 2024 05:18 AM

கள்ளக்குறிச்சி: திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் தொடர்பான போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைத்து 25 வது ஆண்டுவெள்ளி விழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் ஆகிய மூன்று அரசு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார்.
விழாவில் அரசு கல்லுாரி தமிழ் துறை தலைவர்கள் ரிஷிவந்தியம் சண்முகம், திருக்கோவிலுார் சீனிவாசன், கள்ளக்குறிச்சி பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஆனந்த குமார் வரவேற்றார்.
இதில் திருவள்ளுவரின் சிறப்பினை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு, திருக்குறளை மையப்படுத்தி குறும்படம், மீள் திரை சுருள், வண்ண ஓவியப்போட்டி நடந்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன் ஒருங்கிணைந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் இன்பக்கனி, கற்பனைச் செல்வன், வீரப்பன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். . பேராசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.