/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை விரிவாக்கப் பணி துவக்கம்
/
திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை விரிவாக்கப் பணி துவக்கம்
திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை விரிவாக்கப் பணி துவக்கம்
திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை விரிவாக்கப் பணி துவக்கம்
ADDED : ஜன 19, 2025 06:39 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் - ஆசனூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.
திருக்கோவிலுார் அடுத்த வேங்கூரில் இருந்து கோட்டை வழியாக ஆசனுார் வரை 18 கி.மீ., துார சாலையை ரூ.101 கோடி செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
வேங்கூர் சர்க்கரை ஆலை வளாகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வைத்தார். எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் துவக்க உரையாற்றினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்., மலையரசன் எம்.பி. எம்.எல்.ஏ., க்கள் உதயசூரியன், மணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், ஒன்றிய சேர்மன் அஞ்சலாச்சி அரசகுமார், துணை சேர்மன் தனம் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுாரில் இருந்து திருவண்ணாமலை வரை ஏற்கனவே நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது திருக்கோவிலுாரில் இருந்து ஆசனுார் வரை நான்கு வழி சாலை பணி துவங்கப்பட்டிருப்பது தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை, வேலுார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணம் எளிதாகும்.

