/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.130 கோடியில் திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி
/
ரூ.130 கோடியில் திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி
ரூ.130 கோடியில் திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி
ரூ.130 கோடியில் திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி
ADDED : அக் 14, 2025 05:03 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அணைக்கட்டு ரூ. 130 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் உள்ள பழமையான அணைக்கட்டு, கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் வெள்ளத்தில் சேதம் அடைந்தது. இதனால், ஏமப்பேர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அணைகட்டு ரூ. 130 கோடி மதிப்பில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புனரமைப்பு பணி துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்தார். பொன்முடி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, கிராம மக்கள், விவசாயி சங்கத்தினர் பங்கேற்றனர்.