/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் அணைக்கட்டு பணி: தலைமை பொறியாளர் ஆய்வு
/
திருக்கோவிலுார் அணைக்கட்டு பணி: தலைமை பொறியாளர் ஆய்வு
திருக்கோவிலுார் அணைக்கட்டு பணி: தலைமை பொறியாளர் ஆய்வு
திருக்கோவிலுார் அணைக்கட்டு பணி: தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : டிச 13, 2025 06:30 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு பணியினை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் அணைக்கட்டின் கரை கடந்தாண்டு பெஞ்சல் புயல் வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏமப்பேர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அணைக்கட்டும் பெரும் அளவில் சேதமடைந்தது.
இதனை 130 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்க நீர்வளத்துறை சார்பில் நிதி ஒதுக்கி கடந்த அக்டோபர் மாதம் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணி துவங்கப்பட்டது. பணிகள் சற்று மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம் நேரில் ஆய்வு செய்தார்.
மழை குறைந்ததன் காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து நின்று விட்டதால், பணியை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், சாத்தனூர் அணையினையில் ஆய்வு பணி மேற்கொண்டார்.
அப்பொழுது அணையில் கட்டப்படவுள்ள உபரி நீர் வழிந்தோடும் பணித்தளம் (கலுங்கல்) பகுதியை பார்வையிட்டு, அணையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தொடங்கப்பட உள்ள நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்தினை ஆய்வு செய்தார்.
அப்பொழுது அணையின் கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், மத்திய பெண்ணையாறு வடிநிலவட்ட செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர்கள் சந்தோஷ், ராஜேஷ், செல்வபிரியன், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் அருணகிரி உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

