/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட மாறுதல் பெற்றும் விடுவிக்கப்படாத திருக்கோவிலுார் போலீசார் புலம்பல்

ADDED : அக் 31, 2025 11:27 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உட்கோட்டத்தில் பணி யாற்றும் 13க்கும் மேற்பட்ட போலீசார் சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் கிடைத்தும் விடுவிக்கப்படாதததால் புலம்பி வருகின் றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான போலீசார் திருக்கோவிலுார், விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு விடும் என நம்பி இருந்தனர்.
ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மாவட்ட மாறுதல் கோரி பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
டி.ஜி.பி., மேற்பார்வையில் நடந்த மாவட்ட மாறுதலில் திருக்கோவிலுார் உட்கோட்டத்தில் பணியாற்றிய 13 க்கும் மேற்பட்டோர் போலீசார், விழுப்புரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர்.
அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில், போலீசார் திருக்கோவிலுார் உட்கோட்டத்தில் இருந்து விடுவிக்கப்படாததால் மாறுதல் கிடைத்தும் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் பலரும் புலம்பி தவிக்கின்றனர்.
அதே நேரத்தில் உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பிற உட்கோட்டங்களில் பணியாற்றிய போலீசார் மாறுதல் பெற்று சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது.