/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது
/
கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது
கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது
கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது
ADDED : ஆக 06, 2025 12:43 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் காரில் மதுபானங்கள் கொண்டு சென்று டோர் டெலிவரி செய்து வந்த நபரை போலீசார்கைது செய்து, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் சந்தப்பேட்டை, கம்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் கரீம் மகன் ஹமீத், 19; இவர், டாஸ்மாக் மது பானங்களை வாங்கி, தனது காரில் ஏற்றிக் கொண்டு, மதுபானம் தேவைப்படுவோரின் இடத்திற்கே சென்று டோர்டெலிவரி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் சந்தப்பேட்டை அருகே ஹமீது ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், சாக்குப் பையில் 60 குவாட்டர் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்து ஹமீத்தைகைது செய்தனர்.