/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் முப்பெரும் விழா
/
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 25, 2025 10:40 PM

சங்கராபுரம், ; சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் பொது சேவை புரிந்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஆடி மாத பூச விழா, இலக்கிய சொற்பொழிவு என முப்பெரும் விழா நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், முருககுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, தலைமையாசிரியர் வெங்கடேசன், மனவளக்கலை மன்ற தலைவர் சீனுவாசன் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை நடந்தது.
பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி அகவல் சிறப்பு குறித்து பேசினார். இந்தாண்டு ரோட்டரி கிளப் தலைவர் மணிவண்ணன், இன்னர் வீல் கிளப் தலைவி இந்துமதி, வாசவி கிளப் தலைவர் பால்ராஜ், டவுன் அரிமா சங்க தலைவர் மீரான்ஷா, தமிழ்படைப்பாளர் சங்க தலைவர் வேலு, செயலாளர் சக்திவேல், தாலுகா மருந்து வணிகர் சங்க தலைவர் நாச்சியப்பன், பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோரின் சேவை பணிகளை வாழ்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் விஜயகுமார், திருவேங்கடம், இன்னர்வீல் முன்னாள் தலைவர்கள் தீபா, மஞ்சுளா, அகல்யா, ஜனனி மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். ராமாயி அறக்கட்டளை சார்பில் மன்ற அன்னதான பணிக்கு பாத்திரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கல்யாணி முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.