கூட்டுறவு சார்நிலை அலுவலர்களுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி
கூட்டுறவு சார்நிலை அலுவலர்களுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி
ADDED : ஜன 22, 2026 05:34 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சார் நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புத்தாக்க பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் சசிகலா, சவிதாராஜ், துணைப்பதிவாளர்கள் ரகு, குறஞ்சி மணவாளன், சாந்தி, விஜயகுமாரி, மனோபார்கவி (பயிற்சி) முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கூட்டுறவு விதி மற்றும் சட்டம், பொதுப்பணி நிலைத்திறன், கூட்டுறவு சங்கம் ஆய்வு செய்யும் விதம், புதிதாக சங்கம் பதிவு செய்யும் விதிமுறை, துணை திருத்தம் செய்யும் வழிமுறை, நகர கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் விதம், பொது சேவை மையம், முதல்வர் மருந்தகம், நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை லாப முறையில் கொண்டு செல்லும் வழிமுறை, ரேஷன் கடையில் உள்ள பி.ஓ.எஸ்., கருவி மூலம் இருப்புகளை சரிபார்த்தல், விசாரணை மற்றும் தண்டனை, தாயுமானவர் திட்டம், சங்க செயலாட்சியருக்கான பணிகள், அலுவலக கோப்புகளை பராமரிக்கும் முறை உட்பட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. வரும் நாளை 23ம் தேதி வரை புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க சார்நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
