
சங்கராபுரம்: பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், தீபாவளி விழா, குடும்பங்கள் சந்திப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது.
அரிமா சங்கத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் வேலு, ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், பாலசுந்தரம், ஏழுமலை, அண்ணாமலை முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவித்த மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் பேசினார். விழாவில் முருககுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன், கல்லை முத்தமிழ்ச் சங்க செயலாளர் காயத்ரி, சேகர், செந்தில், சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் அன்பரசி நன்றி கூறினார்.