ADDED : அக் 27, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் வினோத்பாபு சின்னசேலம் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி குடிமை பொருள் தனி தாசில்தார் சரவணன் திருக்கோவிலுார் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சிலம்பரசன், குடிமை பொருள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

