/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் வண்டல் மண் கடத்திய மூன்று லாரிகள், ஜே.சி.பி., பறிமுதல்
/
திருக்கோவிலுாரில் வண்டல் மண் கடத்திய மூன்று லாரிகள், ஜே.சி.பி., பறிமுதல்
திருக்கோவிலுாரில் வண்டல் மண் கடத்திய மூன்று லாரிகள், ஜே.சி.பி., பறிமுதல்
திருக்கோவிலுாரில் வண்டல் மண் கடத்திய மூன்று லாரிகள், ஜே.சி.பி., பறிமுதல்
ADDED : ஜூலை 02, 2025 07:55 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலுாரில் வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரி, ஒரு ஜே.சி.பி., யை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஏரிகளில் இருந்து வண்டல் மண் கடத்தப்படுவதாக நேற்று தினமலரில் விரிவான செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகாமி, அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
டி.கே. மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே ஏரி மண் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகளை மறித்து சோதனையிட்டனர். அரசு அனுமதியின்றி மூன்று யூனிட் வண்டல் மண் கள்ளத்தனமாக விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் காட்டு ஏரியில் அரசு அனுமதியின்றி ஜே.சி.பி., மூலம் லாரியில் மண் ஏற்றியதை கண்டறிந்தனர்.
ஜே.சி.பி., உரிமையாளர் கீரனுார் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெண்ணிலவன், 38; ஜே.சி.பி., டிரைவர் மேல்தொட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்குமார், 30; வண்டல் மண் ஏற்றிய லாரி உரிமையாளர் டி கீரனுார் சேர்ந்த ஆறுமுகம், 35; லாரி டிரைவர் கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அய்யனார், 19; ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மண்டபம் பஸ் நிறுத்தத்தில் வண்டல் மண் ஏற்றி வந்த தகடியைச் சேர்ந்த ராசு மகன் மணிகண்டன், 26; ஜெயக்குமார் மகன் கஜேந்திரன், 23; ஆகியோர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், அய்யனார், அருண்குமார், மணிகண்டன், கஜேந்திரன் ஆகியோரை கைது செய்து, மூன்று லாரி, ஒரு ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்தனர்.