/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் டைமிங் பிரச்னை பஸ் நிலையத்தில் டிராபிக் ஜாம்
/
கள்ளக்குறிச்சியில் டைமிங் பிரச்னை பஸ் நிலையத்தில் டிராபிக் ஜாம்
கள்ளக்குறிச்சியில் டைமிங் பிரச்னை பஸ் நிலையத்தில் டிராபிக் ஜாம்
கள்ளக்குறிச்சியில் டைமிங் பிரச்னை பஸ் நிலையத்தில் டிராபிக் ஜாம்
ADDED : ஆக 14, 2025 12:27 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இரு தனியார் பஸ் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட டைமிங் பிரச்னையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்கள்,சுற்று வட்டார நகர பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது.
அப்போது பின்னால் புறப்படும் மற்றொரு தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் நேர பிரச்னை தொடர்பாக முன்னாள் சென்ற பஸ்சை மறித்தனர். தொடர்ந்து, 2 தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இடையே கடும் வாக்கு வாதம் நடந்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து மற்ற எந்த பஸ்களும் வெளியே முடியாமல் 20 நிமிடம் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பஸ்களில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு இரு தனியார் பஸ்சையும் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.