/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி சாலைகளில் புகையிலை விழிப்புணர்வு வாசகம்
/
அரசு பள்ளி சாலைகளில் புகையிலை விழிப்புணர்வு வாசகம்
அரசு பள்ளி சாலைகளில் புகையிலை விழிப்புணர்வு வாசகம்
அரசு பள்ளி சாலைகளில் புகையிலை விழிப்புணர்வு வாசகம்
ADDED : ஜூன் 17, 2025 10:05 PM

ரிஷிவந்தியம், ; மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு அருகே சாலையில், புகையிலை விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புகையிலை பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற தலைப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு அருகே, 100 மீட்டர் தொலைவில் சாலையில் 'டுபாக்கோ ப்ரீ ஜோன்' அதாவது புகையிலை இல்லாத பகுதி என வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பெயிண்ட் மூலம் விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டு வருகிறது. ரிஷிவந்தியம் பகுதியில் பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, சூளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.