/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் தொல்குடியினர் விழா
/
கல்வராயன்மலையில் தொல்குடியினர் விழா
ADDED : நவ 18, 2024 06:31 AM

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் தொல்குடியினர் தின விழா நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெள்ளிமலையில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொல்குடி பள்ளி லோகோவை வெளியிட்டு, மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து கரியாலுார் கோடை விழா அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் லட்சுமிபிரியா, உதயசூரியன் எம்.எல்.ஏ., கூடுதல் செயலர் உமாமகேஸ்வரி, பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் வரவேற்றார். அமைச்சர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் சந்திரன், துணைச் சேர்மன் பாட்ஷாபீ ஜாகீர்உசேன், பி.டி.ஓ., அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.