/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டர் டிரைவர் வெட்டி கொலை மூங்கில்துறைப்பட்டு அருகே பயங்கரம்
/
டிராக்டர் டிரைவர் வெட்டி கொலை மூங்கில்துறைப்பட்டு அருகே பயங்கரம்
டிராக்டர் டிரைவர் வெட்டி கொலை மூங்கில்துறைப்பட்டு அருகே பயங்கரம்
டிராக்டர் டிரைவர் வெட்டி கொலை மூங்கில்துறைப்பட்டு அருகே பயங்கரம்
ADDED : நவ 04, 2024 07:03 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி காப்புக்காட்டில் டிராக்டர் டிரைவரை வெட்டி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி, ராஜசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 40; சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். சுதா, 35; என்ற மனைவியும், சுவேதா, 14; மற்றும் சாரு, 9; ஆகிய இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற வெங்கடேசன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வடபொன்பரப்பி காப்புக்காட்டில் உள்ள டேம் வாய்க்கால் அருகே, கத்தியால் வெட்டப்பட்ட நிலையில், வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் விநாயகமுருகன், சுமதி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, நேற்று மாலை 4:00 மணியளவில், வெங்கடேசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.