ADDED : பிப் 16, 2026 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே டிராக்டரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மகன் முத்தரசன், 35; இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை கடந்த 10ம் தேதி விவசாய நிலத்தில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது டிராக்டர் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம்.
இது குறித்து முத்தரசன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து டிராக்டர் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

