/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.84 லட்சத்துக்கு வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.84 லட்சத்துக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.84 லட்சத்துக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.84 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : டிச 09, 2024 10:10 PM
கள்ளக்குறிச்சி ;கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 10.84 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, மக்காச்சோளம் 400 மூட்டை, வேர்க்கடலை 28, கம்பு 5, தலா ஒரு மூட்டை ஆமணக்கு, எள், உளுந்து என 436 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,228 ரூபாய்க்கும், வேர்க்கடலை 10,611, கம்பு 2,439, ஆமணக்கு 5009, எள் 13,838, உளுந்து 4,099 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 10 லட்சத்து 84 ஆயிரம் 304 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 57 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,086 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 322க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் கம்பு 46 மூட்டை, நெல் 30, சோளம் 20, எச்.பி.கம்பு 4 என 100 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக கம்பு 2,785 ரூபாய்க்கும், நெல் 2,587, சோளம் 2,265, எச்.பி.கம்பு 2,409 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 லட்சத்து 19 ஆயிரத்து 725க்கு வர்த்தகம் நடந்தது.