/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.15.26 லட்சத்துக்கு வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.15.26 லட்சத்துக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.15.26 லட்சத்துக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.15.26 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : நவ 05, 2024 06:29 AM

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 15.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு, மக்காச்சோளம் 600 மூட்டை, மணிலா 45, கம்பு 42, சிவப்பு சோளம் 2, தலா ஒரு மூட்டை எள், ராகி உட்பட 691 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,324, மணிலா 9,289, கம்பு 2,758, சிவப்பு சோளம் 4,213, எள் 6,249, ராகி 2,899 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 419க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 81 மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,246 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 88க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 45 மூட்டை, கம்பு 15, மக்காச்சோளம் 8, தலா ஒரு மூட்டை எள், ராகி என மொத்தம் 70 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை கம்பு 3,055, மக்காச்சோளம் நெல் ரூ.1,875, எள் 6,559, ராகி 3,259 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

