/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜன 13, 2026 05:14 AM
சங்கராபுரம்: பாண்டலம் வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார்.
சங்க புதிய நிர்வாகிகள் தலைவராக குமார், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளர் துரைவேல், துணைத் தலைவர் லோகராஜன், துணைச் செயலாளர் மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் பதவியேற் றனர்.
நிகழ்ச்சியில், வணிக பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொருளாளர் துரைவேல் நன்றி கூறினார்.

