/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய இடத்தில் பஸ் நிலையம் அமைக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

ADDED : டிச 15, 2025 06:12 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 6ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ராஜா மகாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், சேகர், தம்பிதுரை, வெங்கடேசன், ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் வரதராஜூலு வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மண்டல தலைவர் சண்முகம், சண்முகவேல், ராஜசேகரன், வீரப்பன் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகரின் மைய பகுதியில் ரயில் நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும், தற்போது அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புறநகர் பஸ் நிலைய பணியை கைவிட்டுவிட்டு மக்கள் பயனடையும் வகையில் புதிய இடம் தேர்வு செய்து அங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட செயலாளர் முத்து நன்றி கூறினார்.