/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ.19.99 லட்சத்திற்கு வர்த்தகம்
/
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ.19.99 லட்சத்திற்கு வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ.19.99 லட்சத்திற்கு வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ.19.99 லட்சத்திற்கு வர்த்தகம்
ADDED : மார் 25, 2025 04:34 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 19.99 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, மக்காச்சோளம் 345 மூட்டை, உளுந்து 90, எள் 45, மணிலா, கம்பு தலா 10 என 500 மூட்டை விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,324, உளுந்து 7,049, எள் 11,741, மணிலா 9,543, கம்பு 2,658 ரூபாய் என மொத்தம் 19 லட்சத்து 99 ஆயிரத்து 47 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 60 மூட்டை, வரகு 15, எள் 1 மூட்டை, விரலி மஞ்சள் 5, பனகாலி மஞ்சள் 2, குண்டு மஞ்சள் 3 மூட்டை என மொத்தம் 85 மூட்டை விற்பனைக்காக வந்தது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,250, வரகு 2133, எள் 11,436, விரலி மஞ்சள் 25,002, பனகாலிமஞ்சள் 14,203, குண்டு மஞ்சள் 12,009 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 498 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 200 மூட்டை, உளுந்து 33, கம்பு 23 என மொத்தம் 256 மூட்டை விற்னைக்கு வந்தது. நெல் 2,220, உளுந்து 7,400, கம்பு 2,659 ரூபாய் என மொத்தம் 7 லட்சத்து 32 ஆயிரத்து 77 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.