/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி

ADDED : ஜன 12, 2025 10:44 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு குரூப்-2, குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
தாட்கோ முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21 - 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விடுதியில் தங்கி படிப்பதற்கான வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.