ADDED : மார் 28, 2026 11:25 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நடந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் சம்பந்தமான முதல்கட்ட பயிற்சி வகுப்பு சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தேர்தல் நடந்தும் அலுவலர் சிராஜூதின், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைரகண்ணன்,வாசுதேவன், வினோத், கோவிந்தராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரசாந்த் ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்பட்டது. துணை தாசில்தார்கள் கோதண்டராமன், தேவதாஸ், பாண்டியன் கலந்து கொண்டனர்.
