ADDED : ஏப் 08, 2026 11:17 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சியாத் மற்றும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தனி தொகுதி சுச்சி தியாகி ஆகியோர் தலைமையில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பில் ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் பணி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தபால் ஓட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஓட்டுப்பதிவு முடிந்த பின்பு ஓட்டு மையத்திற்கு செல்லுதல் மற்றும் அதன் அறிக்கையை பொது பார்வையாளர்களிடம் ஒப்படைத்தல், இல்லங்களில் தபால் ஓட்டு பெறும்போது கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபடித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என நுண் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, பயிற்சி உதவி கலெக்டர் சுபதர்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், தேர்தல் தாசில்தார் பரந்தாமன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
