திருக்கோவிலுாரில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி
திருக்கோவிலுாரில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 28, 2026 11:20 PM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது உள்ளிட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி, திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தேர்தல் அலுவலர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர்கள் சரவணன், செல்வமூர்த்தி முன்னிலை வகித்தனர். மண்டல அலுவலர்கள் முகாமில் பங்கேற்ற 1694 ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்தல் தனி தாசில்தார்கள், தாலுகா அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
