/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
தியாகதுருகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 12, 2025 11:40 PM

தியாகதுருகம் தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், அட்மா திட்டம் சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு ரகுராமன் தலைமை தாங்கினார். உதவி விதை அலுவலர் ஞானவேல், வேளாண்மை அலுவலர் இளையராஜா முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூரியா வரவேற்றார்.
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மானாவாரி பகுதி மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த முறையில் பயிர்சாகுபடி, கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.
பயிற்சியில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, கலைவாணன் மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.