ADDED : ஏப் 18, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதி விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
தியாகதுருகம் வட்டார வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் கொங்கராயபாளையம் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் உதவி இயக்குனர் ரகுராமன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
தொழில்நுட்ப மேலாளர் சூர்யா வரவேற்றார்.
ஆத்மா திட்ட செயல்பாடுகள், உழவன் செயலி பயன்பாடு, கோடை உழவின் பயன்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயூட்ட உரங்கள் பயன்பாடு, பயிர் சுழற்சி செய்வதன் அவசியம், சொட்டுநீர் பாசன முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர் ரஞ்சிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, கலைவாணன் கலந்து கொண்டனர்.