/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிதாக பணியில் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி
/
புதிதாக பணியில் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி
புதிதாக பணியில் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி
புதிதாக பணியில் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 20, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புதிதாக பணியில் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். புதிய விற்பனையாளர்களுக்கு, தமிழக அரசின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளுதல். யூனிட் கணக்கு விபரம், கடை திறக்க வேண்டிய நேரம், ஊனமுற்றோர், முதியவர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், துணைப்பதிவாளர் சுகுந்தலதா, சார்பதிவாளர்கள் சக்திவேல், கோவிந்தராஜூலு, சண்முகவேல், நிர்மல், செல்வராசு, அருண்குமார் பங்கேற்றனர்.