/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 04, 2025 01:12 AM

ரிஷிவந்தியம்: அரியலுாரில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் தொடர்பாக பயிற்சி வகுப்பு நடந்தது.
வாணாபுரம் அடுத்த அரியலுாரில் நடந்த பயற்சி வகுப்பிற்கு. வாக்காளர் பதிவு அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தேவதாஸ் வரவேற்றார்.
கூட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் இன்று 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 4 வரை நடக்கிறது. ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று, வாக்காளரை சந்தித்து படிவம் வழங்க வேண்டும்.
படிவத்தை நிரப்புவதற்கான சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும். தினமும் எவ்வளவு படிவங்கள் வழங்கப்பட்டது என்ற தகவல்களை தெரிவிக்க வேண்டும். அதன் விபரம் கூகுள் ஷீட்டில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்ந்து, மீண்டும் வாக்காளர்களை சந்தித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை வாங்கி, பி.எல்.ஓ., என்ற செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மொத்த படிவங்களையும் சேகரித்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுதியில் 306 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளனர். இந்த பணியினை கண்காணிப்பதற்காக துணை தாசில்தார் நிலையில் பணிபுரியும் 6 அலுவலர்களை கண்காணிப்பாளராகவும், வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் 31 பேர் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

