/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் குறித்த பயிற்சி
ADDED : நவ 01, 2024 06:49 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கபள்ளியில் 1,2,3 ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனிவாசன், மேகலா முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.