/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் தரம் கண்டறிய பெண்களுக்கு பயிற்சி
/
குடிநீர் தரம் கண்டறிய பெண்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 31, 2025 10:58 PM

கள்ளக்குறிச்சி; கிராமங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் தரம் குறித்த கிராம பெண்கள் மற்றும் சுகாதார குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்கள் மற்றும் சுகாதார குழுக்களுக்கு குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வது குறித்து தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் குடிநீரின் காரத்தன்மை, கடினத் தன்மை, புளூரைடு, நைட்ரைட், மொத்தக் கரை உப்புகள், இரும்பு, பாஸ்பேட் உள்ளிட்ட 12 வகையான சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு களநீர் பரிசோதனை கையேடு வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இப்பயிற்சி வகுப்பில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆனந்தன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆத்மலிங்கம், கவுசல்யா, பயிற்றுனர்கள் பெருமாள், கார்த்திகேயன், வெங்கடேசன் மற்றும் மகளிர் சுகாதார குழு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.