/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்
/
விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம்
ADDED : செப் 01, 2025 11:38 PM

ரிஷிவந்தியம்: அரியலுார் கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் உபயோகத்தை குறைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தில் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், துணை தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, கரும்பு பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.
ரசாயன உரங்களை படிப்படியாக குறைத்து, இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. நெட்டா பார்ம் நிறுவன ஊழியர் சிவசங்கர் சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து கூறினர். கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் முகமது நசுருல்லாகான், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகனேஷ்வர், மேரி ஆனந்தி, பயிர் காப்பீட்டு பணியாளர் வீரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.