/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி
/
ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 23, 2024 07:59 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துாரில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்து ஆத்மா திட்டத்தின் மூலம் பயிற்சி நடந்தது.
பயிற்சிக்கு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேளாண் இயக்குனர் கண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் பார்வதி அரசன் முன்னிலை வகித்தார். சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்க அலுவலர் ராஜேஷ்நாராயணன் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
கரும்பு அலுவலர் தாமரைச்செல்வி நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் ஒரு கரும்பு குழி தட்டு நாற்றங்கால் தயாரித்தல் போதிய இடைவெளி விட்டு நடவு செய்தல் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் புஷ்பவள்ளி மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தோட்டக் கலைத் துறை அலுவலர் ஷோபனா தோட்டக் கலை மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.