/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை விமானபடை ஓடுதள பாதையில் சிறிய ஆளில்லா விமானத்தை இயக்கி பயிற்சி

ADDED : ஜன 25, 2025 05:35 AM

உளுந்துார்பேட்டை :  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி பகுதியில் 2ம் உலக போரின் போது ராணுவ விமானபடை ஓடுதளம் அமைத்து பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் விமானப்படை ஓடுதள பாதை பயன்பாடின்றி, ஆக்கிரமிப்பில் இருந்தது.
தற்போது, இந்த விமானபடை ஓடுதள பாதையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ட்ரோன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள், ராணுவ எல்லைப் பகுதிகளை கண்காணிப்பதற்கு கேமராவுடன் கூடிய சிறிய ஆளில்லாத விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது, எல்லைப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கவும், எதிரிகளின் நிலைகளை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் .
இது தவிர, விவசாய விளைநிலங்களில் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கு, ட்ரோன்களை பயன்படுத்த பயிற்சி அளிக்க உள்ளனர்.  இதில், பின் தங்கியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இதற்கான ட்ரோன் பயிற்சியின் முன்னோட்டத்தில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஈடுபட்டனர்.