ADDED : அக் 09, 2024 04:01 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியும் முறை தொடர்பான பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் லோகு வரவேற்றார்.
வேதியியல் துறைத் தலைவர் அகமதுசுல்தான், இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் துறைத்தலைவர் மேகலை வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் பங்கேற்று, கலப்படம் நிறைவு நிறைந்த உணவினை கண்டறியும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள், புகார் அளிக்கும் முறை, உணவே மருந்து குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, பவுலின் சங்கீதா, மாரியாப்பிள்ளை, சங்கீதா, ராமர், வெங்கடேசன், சக்திவேல், ராணி, சண்முகசுந்தரி, செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உதவி பேராசிரியர் அங்முத்து நன்றி கூறினார்.

