/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மாதிரி மகளிர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை
/
அரசு மாதிரி மகளிர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை
அரசு மாதிரி மகளிர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை
அரசு மாதிரி மகளிர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை
ADDED : நவ 19, 2025 06:42 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறையை கலெக்டர் பிரசாந்த் துவக்கினார்.
வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், 20 ஆயிரம் மாணவர்களுக்கான சான்றிதழ் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.
காடுகளையும், காட்டு உயிர்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடக்கிறது.
இதற்காக தமிழகம் முழுதும் 40 மாவட்டங்களைச் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து, 11ம் வகுப்பு பயிலும் 500 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக 25 ஆசிரியர்களுக்கு 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, சி.இ.ஓ., கார்த்திகா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

