/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் பஸ் உரிமையாளருக்கு போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
/
தனியார் பஸ் உரிமையாளருக்கு போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
தனியார் பஸ் உரிமையாளருக்கு போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
தனியார் பஸ் உரிமையாளருக்கு போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை
ADDED : செப் 25, 2024 06:42 AM
உளுந்துார்பேட்டை, : ஒரே பதிவெண்ணில் மற்ற பஸ்களை இயக்கிய தனியார் சொகுசு பஸ் உரிமையாளருக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வரி செலுத்தாமல் சென்ற தனியார் சொகுசு பஸ்சை மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்து விசாரித்தார். விசாரணையில் ஒரே பதிவெண்ணில் 4 தனியார் சொகுசு பஸ்கள் சென்றது தெரியவந்தது.
அதன் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் பறிமுதல் செய்த பஸ்சின் உரிமையாளர் செந்தில்குமாரிடம் வரி செலுத்துவதில் இருந்து ஏமாற்றுவதற்காக மோசடியாக ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் மற்ற பஸ்சுகளையும் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துவருமாறு எச்சரித்து அனுப்பினார். அதை தொடர்ந்து பஸ் உரிமையாளர் மீது, அபராதம் விதிப்பது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.