/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திம்மலை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா
/
திம்மலை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஏப் 21, 2025 10:48 PM

தியாகதுருகம்,; கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிக்குழு சார்பில் தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, உதவி திட்ட அலுவலர் குமார், பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி கோர்ட்டில் பணிபுரியும் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், ஊராட்சி தலைவர் தேவி, வழக்கறிஞர்கள் பிரகாஷ், சசி ராஜன், தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், கலியன், நெடுஞ்செழியன், பாலு, சண்முகம், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.