
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பங்காரம் லட்சுமி கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
என்.எஸ்.எஸ்., செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்க, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் பேசினார். பெரியசிறுவத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியினை மணிகண்டன், மகேந்திரன், விக்னேஷ், சுபஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.