ADDED : ஜூன் 08, 2026 05:49 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார். கால நிலை மாற்றத்துறை பசுமை ஒருங்கிணைப்பாளர் அகான்ஷா, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தஜோதி, ஹெலன்ஜெயா முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் வரவேற்றார்.
சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க, ஆசிரியர்களிடமும், தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க மாணவர்களிடமும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அ னந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
