ADDED : அக் 03, 2026 09:57 PM

அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது சிலைக்கு வாசவி வனிதா கிளப் மற்றும் லயன்ஸ் சங்கம், ஸ்டார் லயன்ஸ் கிளப், காங்., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக லயன்ஸ் சங்கம் பெருமாள் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் பொன் குமார், மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் சிவசங்கர், காங்., முன்னாள் தலைவர் ரகுராஜன், பொருளாளர் அருள் பாரத் ஆகியோரது தலைமையில் பஸ் நிலையத்திலிருந்து காந்தி பொது மேடை வரை ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே போல் காமராஜரின் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, நவீன எரிவாயு தகன மேடை கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
ஆட்டோ சங்க நிர்வாகி வேலு, நவீன், சரண்ராஜ் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
